Positive and negative energy
முந்தைய அத்தியாயத்தில் நேர்மறை எண்ணங்கள் நேர்மறை சக்திகளை வெளிப்படுத்தும் என்று சொன்னேனல்லவா? எதிர்மறை சக்திகள் என்னவென்றும் அதன் அதிசயங்களையும் பார்ப்போம். இந்த பிரபஞ்சமே ஒரு அதிர்வு நிலைய தான் என்று அறிவியலார் சொல்ல கேட்டிருக்கிறீர்களா? அப்படி என்றல் இந்த பூமியும் ஒரு அதிர்வு தான், அதில் வாழும் நாமும் அதிர்வுதான் இல்லையா? நீங்கள் என்ன மாதிரி எண்ண ஓட்டங்களில் இருக்கிறீர்களோ அதே மாதிரியான அதிர்வுமில்லை பயன்கள் தான் உங்களை வந்து சேரும். நீங்கள் நேர்மறை மனிதராக இருந்தால் நேர்மறை அதிர்வு நிலையிலும், எதிர்மறை எண்ணங்களை உடையவர்களாக இருந்தால் எதிர்மறை அதிர்வு நிலையிலும் இருப்பீர்கள். நீங்கள் மட்டும் அல்ல, நீங்கள் வாழும் இடம், நீங்கள் பயன்படுத்தும் பொருள் எல்லாமே ஒரு அதிர்வை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கும். இதை நீங்கள் உணர்த்திருப்பீர்கள், ஒரு ஆளை முதல்முறை பார்த்தபொழுதே உங்களுக்கு பிடிக்கும் அல்லது பிடிக்கம்மால் போயிருக்கும். ஒரு புது இடத்திற்கு போகும்பொழுது உடனே அங்கிருந்து போகத்தூண்டும். அல்லது புது இடத்தில் தூக்கம் வராமல் இருக்கும். இதன...